Wednesday, 27 January 2016

குடியரசு தினம்...சுதந்திர தினம்

இந்திய விழா....

இந்திய தேசமெங்கும்
ஆர்ப்பரிக்கும்
கொண்டாட்டம்....
ஏனிந்த கொண்டாட்டம்....

எத்தனையோ திருவிழாக்கள்
நாம் பிறந்த பொன்னாட்டில்...

தமிழனுக்கு
தைப்பொங்கல்...
தெலுங்கருக்கு
உகாதி....
மலையாளத் திருவோணம்.
மராட்டியாத்தில் ஹோலி...
வங்கத்தில் தசரா போல்
வண்ணவண்ண திருவிழாக்கள் நமது தேசத்தில் ஏராளம்...ஏராளம்...
இவை இங்கே இனங்களின் அடையாளம்....

இன்னும் சில திருவிழாக்கள்

இந்து...தீபாவளி
இசுலாம்...ரமலாம்
கிருத்துஜெயந்தி
சமணருக்கு மகாவீர ஜெயந்தி
மற்றும் ஒருவருக்கு புத்த பூர்ணிமா...

இவையெல்லாம்
மதங்களின் அடையாளம்..

இரண்டு விழாக்கள் இன்னும் மீதமுண்டு

ஆகத்து 15 சுதந்திர தினம்
சனவரி 26 குடியரசு தினம்..

இவை
மதங்களை மறக்கச்செய்யும்..

இனம் கடந்து
இந்திய தேசத்தை
நேசிக்கச்செய்யும்...

எனவேதான்
இவ்விரு விழாக்கள்...
இந்திய திருவிழாக்கள்...

இந்தியர் நாம்
ஒன்றிணைந்து வீழாது இருந்திடவே
இவ்விழாக்களுக்கு  விழா எடுத்தோம்....
எடுக்கின்றோம்...இனி வரும்நாளும்.......
குடியரசு தின வாழ்த்துகள்

....சு.சக்திவேல் முருகன்