Saturday 28 November 2015

மழையின் கண்ணீர்

மழையின் கண்ணீர்


கதிரவனின் கனல் கொதிக்க
  உடல் பிரிந்த உயிராய்
  ஆவியாகப்பிரிகின்றேன்...

இடமிழந்து நிலம் பிரிந்து
நீராவியாய்ச் செல்கின்றேன்

மறுபிறப்பென்பது

மற்ற உயிர்க்கெல்லாம்

கற்பனையில் காண்பீர்கள்..

மழை- எனது மறுபிறப்பு என்பது

அறிவீரா மானிடரே....

வெண்மேகமாய் உலவுகின்ற
வேளையிலும்
தாய்ப்பசுவைத் தூரவைத்து
கட்டிவைத்த கன்றினைப்போல்
நிலம் சேரத் துடிக்கும்

எனது துடிப்பு உணர்வீரா மானிடரே.....


வான் முதல் நிலம் வரை
 
நான் பயணிக்கும் வேளை

அடைக்கும் தாழுடைத்து வரும்
 புண்கணீர் என்பது உணர்வீரா மானிடரே....

ஆவியாக நான் சென்று

நீராகத் திரும்பி வந்தவேளையிலே

நானிருந்த ஏரிகளைக் காணவில்லை..
குளங்களில் குடியிருப்புகள்...

ஏரி குளம் அழித்தீர்-இருப்பிடம் இழந்தேன்

மரங்களை வெட்டினீர்- மறுபிறப்பில் குறைந்தேன்.


இப்போது பெய்வது கனமழையல்ல.
 இருப்பிடம் இழந்து நான் வடிக்கும் கண்ணீர் மழை...

ஊடக நண்பர்களே......
 
தலைப்புச்செய்தி “குடியிருப்புக்குள் மழைநீர் புகுந்தது”

தயவுசெய்து செய்தி மாற்றுங்கள்

“இருப்பிடத்தை குடியிருப்புகளில் தேடியது மழைநீர்”

மானிடரே மன்றாடி வேண்டுகிறேன்
 
மற்றுமொரு மறுபிறப்பில் என் ஏரிகளை எனக்கே தாருங்கள்.....
கண்ணீர் மழையாகக் கேட்கின்றேன்....

கடல் எனக்கு பிடிக்கவில்லை...

ஊருக்குள் எனக்கும் ஒரு இடம் தாருங்கள்.....

















No comments:

Post a Comment